2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

நீராடுவதற்குச் சென்ற குடும்பஸ்தரை காணவில்லை

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 31 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, வ.சக்தி, கனகராசா சரவணன்

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருப்பழுகாமம் ஆத்துக்கட்டு பாலத்தில் நேற்று (30)மாலை நீராடுவதற்காக சென்ற குடும்பஸ்தரன் ஒருவர், நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார்.

போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட திருப்பழுகாமம், வன்னிநகர் கிராம உத்தியோகஸஸ்தர் பிரிவில் வசிக்கும் 3 பிள்ளைகளின் தந்தையான வல்லிபுரம் ஞானசேகரம் (55 வயது) என்பவரே, இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

அவருடைய தொப்பி, மேல் அங்கி, துவிச்சக்கர வண்டி ஆகியவற்றை, ஆத்துக்கட்டு பாலத்தில் வைத்து விட்டு குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல் போனவரை திருப்பழுகாமம் மீனவர் சங்கத்தினர் ஒன்றிணைந்து, மீன்பிடித் தோணிகள் மூலம் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையிலும் இன்று (31) மதியம் வரை அவரைக் கண்டுபிடிக்காத நிலையில், தேடுதல் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன.

சம்பவ இடத்துக்கு வன்னிநகர் கிராம உத்தியோகத்தர், பிரதேச இராணுவத்தினர், களுவாஞ்சிகுடி பொலிஸார் வருகை தந்து, இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .