2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

நீதிமன்ற உத்தரவில் மாணவர்கள் வெளியேற்றம்

Princiya Dixci   / 2022 மே 03 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தின் மாணவர் ஒன்றிய தலைவர் வி.சுரேந்திரன் உள்ளிட்ட அனைத்து மாணவர்களும் விடுதியில் இருந்து வெளிச்செல்லுமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றை, நேற்று (02) பிறப்பித்து கட்டளையிட்டது.

பல்கலைகழகத்தில் இம்மாதம் முதலாம் திகதியில் இருந்து எதிர்வரும் 29ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், விடுதியில் இருந்து மாணவர்கள் வெளியேறுமாறு நிர்வாகம் அறிவித்தபோதும் மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியேறாமல் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி ஜ.பி. கெனடி, காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கினார்.

இதனையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுமிந்த நயனசிறி தலைமையில் நீதிமன்றத்தில் மேற்படி தடை உத்தரவு கோரப்பட்டது.

இந்த நீதிமன்ற தடை உத்தரவையடுத்து மாணவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X