2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

தொடர் மழை; குளங்களின் நீர்மட்டமும் உயர்வு

Editorial   / 2022 மார்ச் 03 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 வ.சக்தி, ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு கடந்த மூன்று நாள்களாக பெய்து வரும் மழை காரணமாக தாழ் நிலப்பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்பதால் மக்கள் பலத்த அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

வாகரை, புதிய காத்தான்குடி, ஆரையம்கதி, நாவற்குடா, கொக்கொடிச்சோலை உட்பட பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. மாவட்டத்தின் பல வீதிகளில் வௌ்ள நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாவட்டத்திலுள்ள பிரதான குளங்களின் நீர் மட்டங்களும் உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில், இன்று (03) காலை 6 மணி வரையில் உன்னிச்சைக்குளத்தின் நீர் மட்டம் 33 அடியாகவும், உறுகாமம் குளத்தின் நீர் மட்டம் 15 அடி 6 அங்குலமாகவும், வாகனேரிக் குளத்தின் நீர் மட்டம் 19 அடி 1 அங்குலமாகவும், உயந்துள்ளன.

அத்தோடு, இன்று காலை 8.30 மணி மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பில் 42.5மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலையத்தின் மட்டக்களப்பு நிலையப் பொறுப்பதிகாரி சுப்பிரமணியம் ரமேஸ் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .