Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2021 டிசெம்பர் 01 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா சபேஷ், வா.கிருஸ்ணா
தொழில் வழிகாட்டல் வாரத்தை முன்னிட்டு, தேசிய ரீதியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களைக் கௌரவித்து பரிசில்கள் வழங்கும் நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (30) நடைபெற்றது.
ஜனாதிபதியின் “சுபீட்சத்தின் நோக்கு " கொள்கைத் திட்டத்தில், உலகளாவிய மட்டத்திலான தொழிற்படையை இலங்கையில் உருவாக்கும் நோக்கில், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் கீழ், தொழில் வழிகாட்டல் வாரம், ஒக்டோபர் மாதம் 04ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
“நாட்டுக்கு சுமை இல்லாத உழைக்கும் தலைமுறை" எனும் தொனிப்பொருளில், “தொழில் வழிகாட்டலை சமூகமயமாக்குதல்” எனும் நோக்கில் இத்தொழில் வழிகாட்டல் வாரம் நடைபெற்றிருந்தது.
இதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்திலும் கொவிட் 19 நிலைமைகளை கருத்தில் கொண்டு, நிகழ்நிலை மூலமாக மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சு, சித்திரம், வினாவிடை போட்டி மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கட்டுரை போட்டி என்பன நடைபெற்றிருந்தன.
இப்போட்டிகளில் பங்குபற்றி தேசிய மட்டத்தில் வெற்றிபெற்று மட்டக்களப்பு மாவட்டத்துக்கு பெருமை சேர்த்த சாதனையாளர்களையும், மாவட்ட மட்டத்தில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றவர்களையும் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வே, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago