Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Freelancer / 2022 ஜூலை 06 , மு.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
நாடு பூராவும் சமுர்த்தி தேசிய துரித பயிர்ச்செய்கை வேலைத்திட்டம் செவ்வாய்க்கிழமை (05) ஆரம்பிக்கப்பட்டது. இவ் வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் கே.கருணாகரன் தலைமையில், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கல்லடி சமுர்த்தி வங்கியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தற்போதைய இக்கட்டான காலகட்டத்தில் பயிர் செய்கையை நாமே உருவாக்கி ஏற்பட்டுள்ள உணவு பற்றாக்குறையை ஓரளவேனும் தீர்த்துக் கொள்வதற்கான செயற்திட்டமாகவே இது கருப்படுகின்றது.
மிக முக்கியமாக மரவள்ளி, வற்றாளை,கத்தரி, மிளகாய் போன்ற பயிர்களை நடுவதன் மூலம் நம் அன்றாட தேவையை ஓரளவேனும் தீர்ப்பதற்கு இது வழி சமைக்கும். இவ்வேலை திட்டம் 05 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 08 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மாவட்ட , பிரதேச, கிராம மட்டம் என செயற்படுத்தப்படவுள்ளன.
இந்நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் ளு.புவனேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் கலந்து கொண்டதுடன், விசேட அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஏ.வாசுதேவன் கலந்து கொண்டார்.
இதன் போது உரையாற்றிய அரச அதிபர் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 31 சமுர்த்தி வங்கிகள் இயங்குவதாகவும், அவை அனைத்தும் தற்போது கணினி மயமாக செயற்படுவதாகவும், அதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதோடு, அதே போன்று நாம் பசுமையான தேசம் வேலைத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் சென்றது போல, சமுர்த்தி தேசிய துரித பயிர்ச்செய்கை வேலைத் திட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றார்.
தற்போதைய கால கட்டத்தில் இவ்வாறான வேலைத்திட்டத்தின் மூலம் ஓரளவு நம் பொருளாதார பிரச்சனையை தீர்த்துக் கொள்ள இவ் வேலைத்திட்டம் நமக்கு உதவக்கூடியதாக இருக்கும் என்றார்.
இந்நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி கணக்காளர் பஸீர், மாவட்ட சமுர்த்தி சிரேஷ்ட முகாமையாளர் து.கு.மனோகிதராஜ் அவர்களும் மாவட்ட சமுர்த்தி வங்கி பிரிவு முகாமையாளர் நிர்மலாதேவி கிரிதராஜ், மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பரமலிங்கம் சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago