2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

தேங்காய்களைத் திருடிய இருவர் சிக்கினர்

Princiya Dixci   / 2021 ஜூன் 25 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

தேங்காய்களைத் திருடிய இருவரை, தோட்ட உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து மடக்கிப் பிடித்து, பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவமொன்று, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடியில் அமைந்துள்ள தென்னந்தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

இதில் மூவர் இணைந்து தேங்காய்களைத் திருடிய போது, இருவர் வசமாக சிக்கியுள்ளனர்.

தனது தோட்டத்தில் தொடர்ந்தும் தேங்காய்கள் திருடப்படுவதாகவும் அதனைக் கண்காணித்த போது இத்திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை பொதுமக்களின் உதவியுடன் மடக்கிப் பிடித்ததாக தோட்ட உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு திருடப்பட்ட 52 தேங்காய்களுடன் இரு நபர்களையும் வாழைச்சேனை பொலிஸார் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .