Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2021 ஒக்டோபர் 04 , பி.ப. 12:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை ஊடாக மேற்கொள்ளப்பட்ட கன்னன்குடா, துறையடி உள் வீதி புனரமைப்பு வேலை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன், ஜனதாக்ஸன் நிறுவனத்தின் அனுசரணையில், செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை ஊடாக வவுணதீவுப் பிரதேசத்தின் கன்னன்குடா கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஒத்துழைப்புடன், துறையடி உள் வீதிக்கு கிறவல் இட்டு செப்பனிடப்பட்டுள்ளது.
செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை பொருளாளர் வ.சக்திவேல், இத்திட்டத்தை உத்தியோக பூர்வமாக மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரனிடம் இன்று (04) ஒப்படைத்தார்.
இதன்போது, செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் த.வசந்தராசா, கிளை நிறைவேற்று உத்தியோகஸ்த்தர் திருமதி பி.வேணுஷா, திட்டத்துக்குப் பொறுப்பான திட்ட உத்தியோகத்தர் எஸ்.ருத்திராஜ் மற்றும் கிளை உத்தியோகத்தர் க.விஸ்வநாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
44 minute ago
44 minute ago
59 minute ago