Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Princiya Dixci / 2020 டிசெம்பர் 31 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஏறாவூர் நகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான நிதியறிக்கை (பட்ஜெட்) திருத்தங்களுடன் 2ஆவது தடவையாகவும், சபையில் நகர சபைத் தலைவரால் சமர்ப்பிக்கப்பட்ட வேளையில் அதுவும் கூச்சல், குழப்பத்தில் முடிவடைந்தது.
வருட இறுதி நாளான இன்று (31) காலை 10 மணிக்கு ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் சபையின் இவ்வாண்டுக்கான இறுதி விசேட அமர்வும் திருத்தங்களுடனான நிதியறிக்கை சமர்ப்பிப்பும் நகர சபைத் தலைவர் இறம்ழான் அப்துல் வாஸித் தலைமையில் நடைபெற்றது.
ஏறாவூர் நகர சபையின் நிதியறிக்கை கடந்த ஒக்டோபர் மாதம் சமர்ப்பிக்கப்பட்டு, அது தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில், திருத்தங்களுடான மறு நிதியறிக்கை மேற்படி சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
நிதியறிக்கையை நகர சபைத் தலைவர் வாசித்து முடித்ததும் உடனடியாக சபையை விட்டு வெளியேறினார்.
இதனால் அங்கு கூச்சலும் குழப்பமும் நிலவியது. நகர சபைத் தலைவர் சபையை விட்டு நகர்ந்ததும் அங்கு கூடிய எதிர்ப்பாளர்களான நகர சபை உறுப்பினர்கள் 12 பேரும் தாங்கள் இந்தத் திருத்தங்களுடனான நிதியறிக்கையை அங்கிகரிக்கவில்லை என்றும் நகர சபைத் தலைவரின் பதவி இயல்பாகவே வறிதாகின்றது என்றும் தெரிவித்தனர்.
எனினும், சபை அமர்வை விட்டு வெளியேறி, நகர சபைத் தலைவரின் அலுவலகத்தில் வந்தமர்ந்த நகர சபைத் தலைவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது, இந்த நிதியறிக்கை, சபையின் 10 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
9 hours ago
9 hours ago