2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

திருடிய இளைஞனின் பெற்றோருக்கு பாராட்டு

Editorial   / 2021 நவம்பர் 18 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

இளைஞன் ஒருவன் திருடிச் சென்ற மோட்டார் சைக்கிளை அவனது பெற்றோர் உரிய நபரிடம் ஒப்படைத்துள்ள சம்பவமொன்று, இன்று (18) இடம்பெற்றுள்ளது.

ஓட்டமாவடியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு இன்று (18) காலை மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர், மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பொருள்கள் கொள்வனவு செய்துள்ளார்.

அதனை அவதானித்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர், மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு அவனது வீட்டில் மறைத்து வைத்துள்ளார். 

குறித்த மோட்டார் சைக்கிளை கண்டு கொண்ட பெற்றோர், இளைஞனிடம் விசாரணைகளை மேற்கொண்டு, வாழைச்சேனை பொலிஸாரின் முன்னிலையில் உரிய நபரிடம் மோட்டார் சைக்கிளை ஒப்படைத்துள்ளனர்.

இந்தத் திருட்டுச் சம்பவத்தை தடுக்க பெற்றோர் எடுத்துக் கொண்ட செயற்பாட்டுக்கு மோட்டார் சைக்கிள் உரிமையாளரும் பொலிஸாரும் திருட்டை செய்த இளைஞனின் பெற்றோருக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .