2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிள்

Princiya Dixci   / 2022 மே 22 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம் நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன், ரீ.எல்.ஜவ்பர்கான், வ.சக்தி       

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று, நேற்று (21)  திடீரென தீப்பற்றி எரிந்ததுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

பெற்றோல் கசிவினாலேயே இந்த மோட்டார் சைக்கிள்  தீப்பற்றியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதன்போது பொதுமக்கள் ஒன்றிணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும் மோட்டார் சைக்கிள் முற்றுமுழுதாக எரிந்து சேதமாகியுள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார், இது தொடர்பிலான மேலதிக  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .