2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

தபோவனம் வயற்காணி தொடர்பாக நாளை விசாரணை

Editorial   / 2020 ஜூன் 30 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன்

தபோவனம் வயற்காணி தொடர்பான விசாரணை, மட்டக்களப்பு கச்சோரியில் அமைந்துள்ள மாவட்டக் காணிச் சீர்திருத்த அதிகார சபையில், அதன் பணிப்பாளர் நே.விமலராஜ் தலைமையில் நாளை  (01) நடைபெறவுள்ளது.

திருகோணமலை தபோவனம் சிறுவர் இல்லத்தால் பராமரிக்கப்பட்டுவரும் வயற்காணிகளை, தனியார் அபகரிப்பதை தடுக்கக் கோரியும் அக்காணிகளை தபோவனம் சிறுவர் இல்லத்தின் பெயரில் பதிவு செய்யக் கோரியும் மூதூர் பிரதேச சபை உப தவிசாளர் சி.துரைநாயகம் எழுத்துமூலம் முறைப்பாட்டது.

மேற்படி காணி மூலம் பெறப்படுகின்ற வருமானம் தபோவனம் சிறுவர் இல்லத்தில் இருக்கும் சிறுவர்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதால், காணி அபகரிப்பை தடுத்து, இல்லத்தின் பெயரில் பதிவு வைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, குறித்த முறைப்பாட்டில் அவர் கோரியுள்ளார்.

இதனையடுத்து, மாவட்டக் காணிச் சீர்திருத்த அதிகார சபையின் பணிப்பாளர் நே.விமலராஜ், சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் விசாரணைக்கான அழைப்பை விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X