2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

தட்டுப்பாடு இல்லாமல் சமையல் எரிவாயு விநியோகிக்க முடிவு

Editorial   / 2021 நவம்பர் 07 , பி.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சமையல் எரிவாயுவை (லீற்றோ கேஸ்) முடியுமானவரை தட்டுப்பாடு ஏற்பாடமால் விநியோகித்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட லீற்றோ கேஸ் ஏக விநியோகஸ்தர்களான எஸ்.எஸ்.எம்.சொல்கார் நிறுவன உரிமையானர் ஏ.எல்.எச்.எம்.இப்றாகீம், இன்று (07) தெரிவித்தார்.

பொதுமக்கள் சமையல் எரிவாயு போத்தலுடன் அலைந்து திரிவதற்கு நாம் இடமளிக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

மாவட்டத்தில் எங்காவது தட்டுப்பாடு நிலவினால் அல்லது பதுக்கி வைத்திருந்தால், விலையை அதிகரித்து விற்பளை செய்தால் தமக்கு அறிவிக்குமாறும் அவர் தெரிவித்தார்.

எரிவாயு எமக்கு நாளார்ந்தம் வர வர அதனை மாவட்டத்திலுள்ள அனைத்து விற்பனையாளர்களுக்கும் தாமதமின்றி விநியோகிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போதுள்ள நிலைமை இன்னும் ஒரு வாரத்தில் சீராகி விடுமெனவும் நம்பிக்கை வெளியிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .