Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Editorial / 2023 பெப்ரவரி 02 , பி.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மீராங்கேணி பிரதேசத்தில் உள்ள வீட்டின் மீது புதன்கிழமை நள்ளிரவு (01) இனம்தெரியாதோரால் பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, வீட்டின் யன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்துள்ளதுடன் எவருக்கும் எதுவிதமான காயம் ஏற்படவில்லை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணயில் தெரியவந்துள்ளது.
முஹமது செய்யது முஹம்மது சவானா என்பவர், இந்தப் பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனையை ஒழிக்க வேண்டும் என அவரின் நண்பர்களுடன் இணைந்து, போதைப்பொருள் வியாபரிகள் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல்களை வழங்கி வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவதினம் அவரும் அவரது தாயாருமாக இரு பெண்கள் நித்திரைக்கு சென்ற நிலையில், 12 மணியளவில் வீட்டின் மீது பெற்றோல் குண்டுதாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு ஏறாவூர் பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மற்றும் தடவியல் பிரிவு பொலிஸார் மேப்ப நாய் சகிதம் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
50 minute ago
1 hours ago