2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

சௌபாக்கிய வீடு ஒப்படைப்பு

Editorial   / 2022 பெப்ரவரி 14 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி சௌபாக்கிய விசேட வீட்டுத் திட்டத்திற்கமைய நிர்மாணிக்கப்பட்ட வீடொன்று, இன்று (14) திறந்து வைக்கப்பட்டு, பயனாளியிடம் ஒப்படைக்கப்பட்டது.

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் 06 இலட்சம் ரூபாய் நிதியிலும், காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஸகாத் நிதிய 03 இலட்சம் ரூபாய் பங்களிப்புடனும் பயனாளியின் பங்களிப்பிலுமாக 13 இலட்சம் ரூபாய் செலவில் இவ்வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

புதிய காத்தான்குடி மேற்கு 167டி கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள அல் அமீன் வீதியில் நிர்மானிக்கப்பட்டுள்ள இவ்வீடு, காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய சிறீதரின் தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரனின் பங்கு பற்றுதலுடன் திறந்து வைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .