2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

சுழற்சி முறையில் புதிய உறுப்பினர்கள்

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 13 , பி.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

சுழற்சி முறையில் உறுப்பினர்களை நியமிப்ப்து என்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தீர்மானத்துக்கு அமைவாக, மட்டக்களப்பு மாநகர சபைக்கு புதிய உறுப்பினர்கள் ஐந்து பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் புதிய உறுப்பினர்களில் மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் ஆபிரகாம் ஜோர்ஜ்பிள்ளை, மண்முனைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிறிஸ்டினா சாந்தன் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பழைய உறுப்பினர்கள் ஐந்து பேர் விலகிக் கொள்ள, அவர்களுக்குப் பதிலாக, புதிய ஐந்து பேருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதை அடுத்து,  மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம்.தயாபரனிடம் புதிய உறுப்பினர்களின் ஆவணங்கள் வெள்ளிக்கிழமை (11) ஒப்படைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் ஜே.ஜெயராஜ், மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவரான சந்திரகாந்தனின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .