Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2022 ஜனவரி 10 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத் திட்டங்கள் பலவற்றுக்கு உதவி வழங்குவதற்கு இலங்கைக்கான அவுஸ்ரேலிய தூதுவர் இணக்கம் தெரிவித்துள்ளார் என மாவட்டச் செயலாளர் கே.கருணாகரன் தெரிவித்தார்.
400 வருடங்கள் பழமை வாய்ந்த மட்டக்களப்பு - கோட்டையை அவுஸ்திரேலியாவின் நிதியுதவியுடன் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கையின் மிகப் பழமையான கோட்டைகளில் ஒன்றாகக் கருதப்படும், மட்டக்களப்பு கோட்டையின் புனரமைப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராயும் வகையில், அவுஸ்திரேலிய தூதுவர் டேவிட் கொலின் மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டார்.
அவரை, மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில், மாவட்டச் செயலாளர் தலைமையில் வரவேற்றதை தொடர்ந்து, கோட்டையின் புனரமைப்புப் பணிகள் மற்றும் மாவட்டத்தின் சுற்றுலாத் துறை அபிவிருத்திகள் தொடர்பில் ஆராயப்பட்டன.
2019ஆம் ஆண்டு தொடக்கம் முன்னெடுக்கப்பட்டுவரும் கோட்டை புனரமைப்பு பணிகள் பூர்த்தியடைந்ததும் குறித்த கோட்டையை சுற்றுலாத் தளமாக மாற்றும் வகையிலான செயற்பாடுகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டன.
டச்சுக் கோட்டை கட்டுவதற்கான ஆரம்ப பணிகள்ஆரம்பிக்கப்பட்டு 400 ஆண்டு நிறைவை முன்னிட்டு, திறன் உள்ளடங்கிய அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்ளும் S4IG நிறுவனத்தால் வெளியிடப்பட்ட விசேட நூல் மற்றும் மட்டக்களப்பு டச்சுக் கோட்டையின் அபிவிருத்தி எனும் நூலும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹெலியிடம் கையளிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
3 hours ago
4 hours ago