Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2022 பெப்ரவரி 01 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
இலங்கையின் 74ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிரமதானமும் மர நடுகை வைபவமும், காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய சிறீதரின் வழிகாட்டலில் இன்று (01) நடைபெற்றன.
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவு ரீதியாக இந்தச் சிரமதானமும் மர நடுகை வைபவமும் முன்னெடுக்கப்பட்டன.
புதிய காத்தான்குடி தெற்கு 167சி கிராம உத்தியோகத்தர் பிரிவில் இடம்பெற்ற மர நடுகை நிகழ்வில், காத்தான்குடி பிரதேச செயலக உதவி மாவட்ட பதிவாளர் கிருஸ்ணப்பிரியன், பிரிவு கிராம உத்தியோகத்தர் திருமதி ஏ.எல்.பாத்திமா ஸம்ஹா, அபிவிருத்தி உத்தியோகத்தர் ரசூல்ஸா, பிரிவு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஹம்சா ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.நூர்தீன், அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி ஏம்.பி.எப்.ரிப்கா, திருமதி ஏ.சர்மிளா, பொலிஸ் உத்தியோகத்தர் தவராசா உட்பட பிரிவு மாதர் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், சிவில் பாதுகாப்புக்குழு அங்கத்தவர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago