2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

சுகாதார விதிமுறைகளை இறுக்கமாக்க தீர்மானம்

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில், சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத வர்த்தக நிலையங்கள் மூடப்படும் என்பதுடன், சுகாதார விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்படும் எனவும் இந்த நடைமுறையை இறுக்கமாக பின்பற்றவுள்ளதாகவும் மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் வேகம் அதிகரித்து வருவதன் காரணமாக, மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் கொரோனா அச்சுறுத்தலைத் தவிர்க்கும் வகையில் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆராயும் கூட்டம், மட்டக்களப்பு மாநகர சபையில் நேற்று (28) நடைபெற்றது.

மாநகர சபை மேயர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், பிரதி மேயர் க.சத்தியசீலன், மாநகர ஆணையாளர் மா.தயாபரன், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதாரத் திணைக்களத்தின் தொற்றியல் வைத்திய பொறுப்பதிகாரி டொக்டர் குணநாயகம், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் க.கிரிசுதன் உட்பட பொதுச்சுகாதார பரிசோதகர்கள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .