Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Freelancer / 2021 ஜூன் 06 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம்.பர்ஸான்
கொடிய கொரோனாவை கட்டுப்படுத்த ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் பிரதேச சபை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பெறுமதி மதிக்க முடியாதது, என்று ஓட்டமாவடி வர்த்தக சங்கத் தலைவர் ஏ.சீ.எம். நியாஸ் ஹாஜி தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில்தான் கொரோனா தொற்றினால் மரணிக்கும் நபர்களின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்த அவர் சுகாதார தரப்பினர்கள்தான் ஜனாஸா நல்லடக்கப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்தோடு, டெங்கு மற்றும் கொரோனா பரவல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.
அதுமாத்திரமின்றி, வர்த்தகர்களின் பிரச்சினைகள் மற்றும் வீதிகளில் நடமாடும் நபர்களை கட்டுப்படுத்துதல் போன்ற பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு அவர்கள் முகம்கொடுத்து வருகின்றனர் என்று தெரிவித்த அவர், இவ்வாறு பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வரும் ஓட்டமாவடி சுகாதாரத் தரப்பினர் தங்களின் பணிகளை திறன்பட செய்து வருகின்றனர் என்றார்.
மக்களின் உயிர்களை பாதுகாக்க தியாக சிந்தனையோடு செயற்படும் சுகாதார தரப்பினர்களை நாம் எந்தவகையிலும் குறைகாண முடியாது. அவர்கள் செய்யும் பணிகள் பெறுமதி மதிக்க முடியாதது எனத் தெரிவித்த அவர், எனவே, குறித்த நோய் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க இரவு, பகலாக பணியாற்றும் சுகாதார தரப்பினர்களுக்கு நாம் என்றும் ஒத்துழைப்புக்கள் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago