2025 ஜனவரி 05, ஞாயிற்றுக்கிழமை

’’சிறுவர்களின் ஆரோக்கியமான வாழ்வை மேம்படுத்துவோம்’’

Janu   / 2024 மார்ச் 04 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

"சிறுவர்களின் ஆரோக்கியமான வாழ்வை  மேம்படுத்துவோம்" எனும் தொனிப்பொருளில் அஞ்சல் ஓட்ட காணிவேல் 2024 நிகழ்வு,  மட்டக்களப்பு மாவட்ட  மெய்வல்லுனர் சங்கத்தின் ஏற்பாட்டில் கழகத்தின் தலைவரும் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தருமான வீ.ஈஸ்பரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.

இதன் போது  மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களில் இருந்து 18 பாடசாலைகளை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அஞ்சலோட்ட வீரர்கள் பங்குபற்றி தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

இதில்  பிரதம அதிதியாக  மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷனி ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கிவைத்துள்ளார்.

எம். எஸ். எம். நூர்தீன் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X