2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

சிறுவன் சடலமாக மீட்பு; பாம்பு தீண்டியதாக சந்தேகம்

Princiya Dixci   / 2021 ஜூன் 08 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி, மஜ்மா நகர் பகுதியில் 14 வயதுடைய முகம்மது இஸ்மாயில் முகம்மது பிர்னாஸ் எனும் சிறுவன், நேற்று (07) சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

இச்சிறுவன், திடீரென சோர்வடைந்த நிலையில் உயிரிழந்துள்ளான். சிறுவனை சிலவேளை பாம்பு தீண்டியிருக்கலாம் என்று குடும்பத்தினர் சந்தேகிப்பதாக மஜ்மா நகர் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஏ.எல்.சமீம் தெரிவித்தார்.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சிறுவனின் உடல், பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இன்று (08) மாற்றப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .