Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை
Princiya Dixci / 2021 மார்ச் 09 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான், க.விஜயரெத்தினம்
மட்டக்களப்பில் சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டல் சேவைகள், பிரதேச செயலக மட்டத்துக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.
இதன் முதற்கட்டமாக, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் விசேடமாக அமைக்கப்பட்ட சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவை மாவட்டச் செயலாளர் இன்று (09) திறந்து வைத்தார்.
சகல வசதிகளுடன் கூடிய இந்தப் பிரிவினூடாக சிறுதொழில் முயற்சியில் ஈடுபடும் முயற்சியாளர்களுக்கான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்கள் சட்ட விடயங்கள், பயிற்சிகள் இலவசமாகக் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறுதொழில், வியாபாரம் ஒன்றை புதிதாக ஆரம்பிக்க உத்தேசித்துள்ளவர்களும் தொழிலொன்றைச் செய்து வருபவர்களும் இப்பிரிவினூடாக சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் மாவட்டச் செயலகத்தில் மாத்திரம் வழங்கப்பட்டு வந்த முயற்சியாண்மை அபிவிருத்தி தொடர்பான ஆலோசனைகள், தொழில்நுட்பம் புத்தாக்க விடயங்கள், நிதி ஆலோசனைகள், சந்தைப்படுத்தல் தொடர்பான ஆலோசனைகள், வியாபார ஆலோசனைகள், அபிவிருத்தி ஆலோசனை போன்ற 6 பிரிவுகளின் சேவைகள் அனைத்தையும் இனிமேல் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் பொதுமக்கள் இலகுவாக பெற்றுக்கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ. வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவு மாவட்ட மேற்பார்வை உத்தியோகத்தர் சி. வினோத், உதவிப் பிரதேச செயலாளர்களான கே. அருணன், லக்ஷன்யா பிரசாந், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் பிரணவஜோதி உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 Apr 2025
27 Apr 2025
27 Apr 2025
27 Apr 2025