2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

சின்ன ஊறணியை விடுவிக்க பரிந்துரை

Princiya Dixci   / 2021 ஜூன் 02 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம், க-சரவணன்

மட்டக்களப்பு, சின்ன ஊறணி பகுதியை நாளை (03) முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்க சுகாதாரப் பிரிவினாரால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்தில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 

கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக இனங்காணப்பட்ட பாலமீன்மடு, கல்லடிவேலூர், திருச்செந்தூர், சின்ன ஊறணி மற்றும் நொச்சிமுனை ஆகிய 5 கிராமசேவகர் பிரிவுகள், மே மாதம் 18ஆம் திகதி முதல் முடங்கப்பட்டன.

இதில் பாலமீன்மடு, கல்லடிவேலூர் மற்றும் திருச்செந்தூர் ஆகின நேற்றையதினம் (01) விடுவிக்கப்பட்டன.

இந்நிலையில், சின்ன ஊறணி கிராம உத்தியோகத்தர் பிரிவு இன்றிலிருந்து  விடுவிப்பதற்கான பரிந்துரை சுகாதாரப் பிரிவினால் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் தற்போது சிவப்பு வலயமாக காணப்படுவதால், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .