2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

சிகிச்சைக்கு தயாராகும் வைத்தியசாலை ஆராய்வு

Princiya Dixci   / 2021 மே 28 , பி.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் 19 சிகிச்சை நிலையமாக மாற்றியமைக்கப்பட்டு வரும் திருகோணமலை கப்பல்துறை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வேலைத்திட்டங்களை, கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீரிதர், இன்று (28) நேரில் சென்று ஆராய்ந்தார்.

அத்துடன், அங்குள்ள குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறும் உரிய அதிகாரிகளுக்கு அவர் பணிப்புரை விடுத்தார்.

கிழக்கு மாகாண கொவிட் 19க்கு ஒருங்கிணைந்த சித்த, ஆயுர்வேத, அலோபதி சிகிச்சை முறைகளுக்கான வைத்தியசாலையாகவே இவ்வைத்தியசாலை தயார்படுத்தப்படுகின்றது.

அதேவேளை, ஆளுநர் அநுராதா யஹம்பத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் திறந்துவைக்கப்படவுள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளின் வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .