2025 மே 06, செவ்வாய்க்கிழமை

சமையல் எரிவாயு விநியோகம்

Princiya Dixci   / 2022 ஜூலை 26 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன் , எம் எஸ் எம் நூர்தீன்

மண்முனை வடக்கு, காத்தான்குடி பிரதேச செயலக பிரிவுகளில்  நேற்று (25) சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கிவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் க. கருணாகரனின் ஆலோசனைக்கு அமைவாக, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ. வாசுதேவன் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ. உதய ஸ்ரீதரன் ஆகியோரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ், எரிவாயு வழங்கப்பட்டது.

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் 1,000 சிலிண்டர்கள் பைனியர் வீதியில் வழங்கப்பட்டதுடன், காத்தான்குடி பிரதேச செயலக பிரிவில் 4 பகுதிகளில் தலா 300 சிலிண்டர்கள் வீதம் மொத்தமாக 1,200 சிலிண்டர்கள் குடும்ப அட்டையின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டு, சுமூகமாக வழங்கப்பட்டன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X