2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

கொரோனா தற்காலிக வைத்தியசாலை

Princiya Dixci   / 2021 மே 30 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஏறாவூர்ப்பற்று, கரடியனாறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கான தற்காலிக வைத்தியசா,லை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனால்  உத்தியோகபூர்வமாக வெள்ளிக்கிழமை (28) திறந்துவைக்கப்பட்டது.

கொரோனா சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, அரசின் ஆலோசனைக்கு அமைவாக, மட்டக்களப்பு மாவட்டத்திலும் 1,000 கட்டில்களை தயார்படுத்தும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

100 அடி நீளமும் 40 அடி அகலமும் கொண்ட இந்தத் தற்காலிக வைத்தியசாலையானது நோயாளர்களுக்கான மின்சார வசதிகள், குடிநீர் வசதிகள் மற்றும் மலசலகூட வசதிகள் உட்பட ஏனைய சகல வசதிகளையும் கொண்ட விடுதியாக அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .