2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

கொட்டும் மழையிலும் கசிப்பு உற்பத்தி; மூவர் தப்பியோட்டம்

Editorial   / 2021 நவம்பர் 07 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றிரவு (06) பாரிய கசிப்பு கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைக்கப்பட்டதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தெரிவித்தார்.

இரவு 8 மணியளவில் கடும் மழைக்கு மத்தியிலும் கொக்கொட்டிச்சோலை சந்திமலைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பாரிய கசிப்பு உற்பத்தி நிலைய முற்றுகையின் போது 135,000 மில்லி லீற்றர் கசிப்பு 630,000 மில்லி லீற்றர் கோடா மற்றும் இரு பரல்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தக் கசிப்பு உற்பத்தி நிலையத்தை நடத்தி வந்த மூவர், அங்கிருந்து தப்பியோடியுள்ளதாகவும் அவர்களைக் கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .