2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

கேரளா கஞ்சா மற்றும் ஐஸ்ஸுடன் இருவர் கைது

Janu   / 2024 செப்டெம்பர் 03 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் கேரளா கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் 32, 38 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளால் திங்கட்கிழமை (2) மேற்கொண்ட திடீர் தேடுதலின் போது குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களின் , ஒருவரிடம் இருந்து ஒன்றரை கிலோ கேரள கஞ்சாவும் மற்றவரிடம் இருந்து 25,000 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் வர்த்தக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திய கையடக்க தொலைபேசியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

நீண்ட நாட்களாக இப்பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் .

இது தொடர்பாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களும் காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ரீ . எல் . ஜ்வ்பர்கான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .