Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Freelancer / 2022 மார்ச் 04 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
திராய்க்கேணி கேணியை மூடிய விவகாரம் தொடர்பாக அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் சமரச கலந்துரையாடல் ஒன்று பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
திராய்க்கேணி தமிழ்க்கிராமத்தின் பாரம்பரிய சலவைத்தொழிலுக்கான நீர்நிறைந்த கேணியை எவ்வித அனுமதியும் இல்லாமல் அட்டாளைச்சேனை பிரதேசசபைத் தவிசாளர் அத்துமீறி மூடிவருவதாக பொதுநல அமைப்புகள் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம் சமர்ப்பித்த முறைப்பாட்டுக்கமைவாக இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேசசெயலாளர் பிரிவினுள் வருகின்ற ஒரேயொரு தமிழ்க்கிராமம் திராய்க்கேணிக் கிராமமாகும்.
இக்கிராம மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
பரம்பரை பரம்பரையாக இக்கேணியில் தமது சலவைத்தொழிலைச் செய்துவருகின்ற இந்நிலையில் அப்பகுதி தவிசாளர் இவ்விதம் அராஜமாகச் செயற்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பொதுமக்கள் அக்கரைப்பற்றுப் பொலிசாரிடம் கொடுத்த முறைப்பாட்டையடுத்து அன்றையதினமே பொலிசார் ஸ்தலத்திற்கு விரைந்து இம்மண்போட்டு மூடும் செயற்பாட்டை இடைநிறுத்தியதாக கிராமத்தலைவர் சி.கார்த்திகேசு தெரிவித்தார்.
அதேவேளை திராய்க்கேணி பெரியதம்பிரான் கோயில் பரிபாலனசபையினர் இவ்அத்துமீறி மண்நிரப்பும் செயற்பாடு குறித்து அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தொடக்கம் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் வரை எழுத்துமூலம் முறைப்பாடு தெரிவித்திருந்தனர்.
அதன்படி பிரதேச செயலகத்தில் நேற்று (3)மாலை இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு ஆலய பரிபாலன சபைத்தலைவர் சி.கார்த்திகேசு மற்றும் செயலாளர் கி.புவனேஸ்வரன் உபதலைவர் ஆகியோர் இணைத்துக்கொள்ளப்பட்டனர். அங்கு பிரதேசசெலயாளர் தவிசாளர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
பிரதேசசபைக்குரிய குறித்தகேணியை மக்களிடம் கேளாமல் அபிவிருத்தி செய்யமுயற்சித்தமை தொடர்பில் தவிசாளர் ஆரம்பத்தில் தனது மனவருத்தத்தை தெரிவித்துக்கொண்டார்.
தொடர்ந்து கலந்துரையால் இடம்பெற்றது. அக்காணியில் சிறுவர் பூங்கா அமைப்பதற்கும் அருகிலுள்ள சலவைத் தொழிலாளர் கட்டடத்தை புனரமைத்துத்தரவும் இவ் ஏற்பாட்டை முன்னெடுத்ததாக தவிசாளர் அங்கு கூறினார்.
அதற்கு, திராய்க்கேணி பிரதிநிதிகள் 'திராய்க்கேணி பாலமுனை 06ஆம் பிரிவுக்குட்பட்ட ஸ்ரீ பெரியதம்பிரான் ஆலய பரிபாலனசபையினரின் கீழ் பராமரிக்கப்பட்டுவந்த சலவைத் தொழிலாளருக்குரிய குளத்தையும் சலவைத்தொட்டி உள்ள கட்டடத்தையும் மாரி காலங்களில் குளத்தில் வேலை செய்து கோடை காலத்தில் கட்டடத்தில் வேலைகளை பரம்பரை பரம்பரையாக செய்துகொண்டு வருகின்றனர்.
அங்கு கட்டடம் திருத்தப்படலாம்.காணியில் புடவைகள் காயவைக்க களம் அமைக்கலாம். ஆனால் சிறுவர்பூங்கா தேவiயில்லை.எனவே எதுவானாலும் நாம் மக்களிடம் கேட்டே சொல்வோம்.' என்றனர்.
பிரதேச செயலாளர் தரப்பில் 'அப்படியானால் 3 நாள் அவகாசம் தருகிறோம் மக்களிடம் அபிலாசைகளைக் கேட்டறிந்து சொல்லுங்கள். அதன்பிறகு இங்கு கூட்டத்தில் அதுபற்றிக் கூறி தீர்மானமெடுப்போம்' என்று முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி இன்றும் நாளையும் திராய்க்கேணியில் மக்கள் கருத்துபெறப்படவிருப்பதாக தலைவர் சி.கார்த்திகேசு தெரிவித்தார். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
21 minute ago
29 minute ago
34 minute ago