2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

கூட்டுறவுச் சங்கத்தின் நடமாடும் வியாபாரம்

Princiya Dixci   / 2021 ஜூன் 01 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹம் அனாம், எம்.எஸ்.எம்.நூர்தீன்

பயணக் காட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளும் வகையில், பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் ஊடாக நடமாடும் வியாபாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்படி, ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் ஏற்பாட்டில், அச்சங்கத்தின் தலைவர் எம்.ரீ.எம்.அஷ்ரப் தலைமையில், நடமாடும் வியாபாரம், இன்று (01) முன்னெடுக்கப்பட்டது.  

இவ்வாறு, ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்து வருவதாக கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.அஹமட் ஹாதி தெரிவித்தார்.

வாகரை தொடக்கம் துறைநீலாவனை வரை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 16 பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் ஊடாக இந்த நடமாடும் வியாபாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வி.தங்கவேல் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .