Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Princiya Dixci / 2020 டிசெம்பர் 21 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு - பதுளை வீதியை அண்டியுள்ள மரப்பாலம் குளத்தில் நண்பர்களுடன் சேர்ந்து குளிக்கச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கிப் பலியானதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (20) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில், மட்டக்களப்பு, கொக்குவில், சுவிஸ் கிராமத்தை சேர்ந்த அன்டன்ராஜ் விதுஷன் (வயது 18) எனும் இளைஞனே பலியாகியுள்ளார்.
சுவிஸ் கிராமத்தில் இருந்து மரப்பாலத்திலுள்ள தமது உறவினர் வீட்டுக்குச் சென்று, நேற்று மாலை மரப்பாலம் குளத்தில் குளிப்பதற்காக நண்பர்களுடன் சென்று நீராடிக் கொண்டிருந்தபோது, இவர் சகதியில் மூழ்கியுள்ளார்.
சக நண்பர்களும் உதவிக்கு விரைந்தோரும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டபோதும் அவரைக் காப்பாற்ற முடிந்திருக்கவில்லை. அவர் சடலமாகவே மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உடற் கூறாய்வுப் பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாiயில் வைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
9 hours ago
9 hours ago