2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

Princiya Dixci   / 2021 மே 30 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமீன்மடு ஆற்றுவாய்ப் பகுதியில் இரு பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தரின் சடலம், இன்று (30) மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். 

பாலமீன்மடு பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இவர், நேற்று (29)  மாலை மட்டி எடுப்பதற்காகச் சென்ற வேளையில் முகத்துவாரம் ஆற்றுவாய் பகுதியை அண்மித்த ஆற்றிலே மூழ்கிக் காணாமல் போயுள்ளார்.

அதனைத் தொடர்ந்து பொதுமக்களும் படையினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில், நேற்றுக் காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைவாக சம்பவ இடத்துக்குச் சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் சடலத்தைப் பார்வையிட்டுள்ளார்.

சடலம்,பி.சி.ஆர் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .