Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2021 ஒக்டோபர் 03 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
குடும்பத் தகராறில் தாக்கப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர், சிகிச்சை பலனின்றி நேற்று (02) மாலை உயிரழந்துள்ளார்.
புதிய காத்தான்குடி 2 கப்பல் ஆலிம் வீதியில் வசித்து வந்த முஹம்மது முஸ்பீர் (வயது 28) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவரது வீட்டில் குடும்பத் தகராறு இடம்பெற்றுள்ளது. மனைவிக்கு இவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு, பின்னர் மனைவியின் சகோதரன் இவரைத் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது காயமடைந்த நபர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, நேற்று மாலை உயிரழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக இவரை தாக்கியதாக தெரிவிக்கப்படும் இவரின் மனைவியின் சகோதரனை, காத்தான்குடி பொலிஸார் கைது செய்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த மேற்படி நபர், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும் இதனாலேயே குடும்பத் தகராறு ஏற்பட்டதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago