Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை
Princiya Dixci / 2021 பெப்ரவரி 18 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.சரவணன், வ.சக்தி
மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நொச்சிமுனை கிழக்கு கிராம உத்தியோகத்தராக கடந்த 3 வருடங்களாக கடமையாற்றிவரும் கிராம உத்தியோகத்தரை உடன் இடமாற்றம் செய்யுமாறு கோரி, கிராம உத்தியோகத்தர் அலுவலகத்துக்கு முன்னால் அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து, இன்று (18) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“பொதுமக்களை, பெண்களை அவமதிக்கும் அதிகாரி வேண்டாம்”, “அரச காணியை பணத்துக்கு விற்கும் கிராம உத்தியோகத்தர் வேண்டாம்”, “பொதுமக்களுக்கு சேவை செய்யாத அதிகாரி எமக்குத் தேவையில்லை” மற்றும் “அனைத்து கிராம உத்தியோகத்தர்களுக்கும் இடமாற்றம்; ஆனால், இவருக்கு மட்டும் இடமாற்றம் இல்லையாம்” போன்ற வாசகங்கள் கொண்ட சுலோகங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் ஏந்தியிருந்தனர் .
இதனையடுத்து, ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்கு வருகை தந்த மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எ.சுதர்சன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடிய பின்னர், மாவட்டச் செயலாளரிடம் கையளிக்குமாறு மகஜர் ஒன்றை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் பிரதேச செயலாளரிடம் கையளித்ததை தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதேவேளை, மேற்படி கிராம உத்தியோகத்தருக்கு எதிராக சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக கிராம சேவையாளரிடம் கேட்டபோது, தான்தொடர்பான எவ்வித செய்திப் பதிவுகளையும் மேற்கொள்ள வேண்டாமெனவும் இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பான எந்தவித கருத்துகளையும் தெரிவிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
52 minute ago
58 minute ago
2 hours ago