2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

கிரானில் வலம்புரி சங்குடன் ஒருவர் கைது

Editorial   / 2022 பெப்ரவரி 25 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் பிரதேசத்தில் இரண்டு இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வலம்புரி சங்கு ஒன்றை விற்பனைக்காக எடுத்துவந்த வாழைச்சேனையைச் சேர்ந்த ஒருவரை நேற்று (24) வியாழக்கிழமை   மாலை கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார்.

மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்கவின் வழிநடத்தலில் சம்பவதினமான நேற்று (24) மாலை குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையிலான பொலிஸார் இரண்டு இலட்சத்து 25 ஆயிரம் ரூபாவுக்கு  வலம்புரி சங்கு வாங்குவது போல நடித்து சங்கை கிரான்பகுதிக்கு எடுத்துவருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து அந்த  நபர் வலம்புரி சங்கை விற்பனைக்காக எடுத்துகொண்டு வந்தபோது கைது செய்யப்பட்டு வாழசை;சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் குறித்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக அவர் தெரிவித்தார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .