Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 24 , மு.ப. 07:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா
உலகெங்கிலுமிருந்து விரிவரங்க நிகழ்நிலையில் 850 நடனக்கலைஞர்கள், பங்கேற்ற மாபெரும் நடன நிகழ்வு கின்னஸ் சாதனைப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
கொரோனா நிதிக்குப் பங்களிப்புச் செய்யும் வகையில் விரிவரங்க நிகழ்நிலை ஊடாக இந்தியாவைச் சேர்ந்த கலைமாமணி மதுரை.ராமச்சந்திரன் முரளிதரனின் நெறியாள்கையின் கீழ் இந்நடன நிகழ்வு நடாத்தப்பட்டது.
தேசிய கல்வி நிறுவக விரிவுரையாளரும் செயற்திட்ட தலைவருமான திருமதி.நிசாந்தராகினி திருக்குமரனின் ஒருங்கிணைத்தலின் கீழ் இலங்கையிலிருந்து 67 கலைஞர்கள் இந்நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர்.
குறிப்பாக கிழக்கிலங்கையிருந்து மாத்திரம் 45 கலைஞர்கள் பங்குபற்றியிருந்ததோடு காரைதீவைச் சேர்ந்த மாணவி செல்வி. ஜெயகோபன் தக்சாளினி என்பவரும் பங்குபற்றி சாதனைச் சான்றிதழைப் பெற்றுக் காரை மண்ணிற்கு பெருமை தேடித்தந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
3 hours ago