Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Janu / 2024 மே 28 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பகுதியிலுள்ள வயல் வெளியில் அமைந்துள்ள கிணறு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் திங்கட்கிழமை மாலை(27) மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
மண்டூர் , கோட்டமுனை பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய தம்பிராசா பதிராசா என்ற மீன் வியாபாரியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவதுவதாவது,
வெல்லாவெளி மண்டூர் பிரதான வீதியில் அமைந்துள்ள வயல் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் சடலம் ஒன்று கிடப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இஸ்த்தலத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ரஞ்ஜித்குமார் முன்னிலையில் கிணற்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் சடலத்தை பார்வையிட்ட நீதிவான் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் கஉயிரிழந்தவர் ஞாயிற்றுக்கிழமை(26) வீட்டிலிருந்து புறப்பட்டு திங்கட்கிழமை (28) மாலை வரை வீட்டிற்கு வராதமை தொடர்பில் , உறவினர்களால் பொலிஸாரிடம் முறைப்படு பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் அவர் பயணித்த துவிச்சக்கரவண்டி அப்பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் இச் சம்பவம் தொடர்பில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
வ.சக்தி
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago