2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

காத்தான்குடி பெண்கள் காப்பகத்திற்கு முன்னாள் ஆளுநர் விஜயம்

Freelancer   / 2023 ஜூலை 18 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர் 

காத்தான்குடி பெண்கள் காப்பகத்தின் தலைவரும் முன்னாள் காத்தானக்குடி நகர சபை உறுப்பினருமான சல்மா அமீர் ஹம்சாவின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம். எல். எம். ஏ. ஹிஸ்புழ்ழாஹ் விஜயம் செய்தார்.

இப் பெண்கள் காப்பகம் தொடர்பான அன்றாட நடவடிக்கைகளை பார்வையிட்டதோடு , எதிர்காலத்தில் இந்த காப்பகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக இக்காப்பகத்தின் நிர்வாக சபை உறுப்பினர்களோடு கலந்துரையாடினார்.

மேலும் காப்பகத்தில் பராமரிக்கப்படுகின்ற பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் சந்தித்து அவர்களின் குறை நிறைகளை கேட்டறிந்து கொண்டார். மேலும் எதிர்வரும் காலங்களில் இக்காப்பகத்தின் அபிவிருத்தியில் தனது முழுமையான பங்களிப்பை தருவதாக முன்னாள் ஆளுநர் இதன்போது குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .