2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

காத்தான்குடி பள்ளிவாசல் விடுத்துள்ள அறிவிப்பு

Freelancer   / 2022 டிசெம்பர் 14 , மு.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள், விற்பவர்களின் வீடுகளில் நடைபெறும் திருமணம், ஜனாஸா கடமைகளுக்கு தமது ஒத்துழைப்பினை வழங்கப்போவதில்லை என புதிய காத்தான்குடி அல் அக்ஸா பெரிய  ஜூம்மா  பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

புதிய காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜூம்மா பள்ளிவாசல்  மேற்கொண்டுள்ள இந்த தீர்மானத்தை  எதிர்வரும் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள், அதனை வியாபாரம் செய்பவர்களின் ஜனாஸாக்கள் தங்களின் மையவாடியில் அடக்கம்  செய்யப்பட மாட்டாது எனவும் பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

அவ்வாறானவர்களின்  பெயர் விபரங்கள் விளம்பர பலகை மூலம் காட்சிப்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .