2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

காத்தான்குடி அபிவிருத்தி குறித்து விசேட கலந்துரையாடல்

Princiya Dixci   / 2021 மார்ச் 09 , பி.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் விசேட கூட்டமொன்று, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தலைமையில், காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நேற்று (08) நடைபெற்றது

இக்கூட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய ஸ்ரீதர், உதவி பிரதேச செயலாளர் திருமதி எம் எஸ் சில்மியா, காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்

இதன்போது காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், வீதி அபிவிருத்தி, சுகாதாரம், கல்வி, சமூர்த்தி போன்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

கொவிட் 19 நோயாளர்களுக்கான சிகிச்சை நிலையமாக தற்போது இயங்கி வரும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையை ஏனைய நோயாளர்களும் சிகிச்சை பெறக் கூடிய வகையில் ஏற்படுத்தித் தருமாறு இதன்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X