2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

காத்தான்குடியில் ஒருவருக்கு தொற்று

Kogilavani   / 2020 டிசெம்பர் 18 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி சுகாதார அலுவலகப் பிரிவில் ஒருவருக்கு நேற்று (17) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய காத்தான்குடியில் வசிக்கும் 59 வயதுடைய சிறுநீரக நோயாளியொருவர் குருதி சுத்திகரிப்புக்காக கல்முனை வைத்தியசாலைக்குச் சென்ற போது அங்கு மேற் கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளரின் குடும்பமும் அவருடன் தொடர்பைப் பேணிய ஏனைய நான்கு குடும்பங்களைச் சேர்ந்தவர்களையும் தனிமைப்படுத்தியுள்ளதாக, காத்தான்குடி பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

காத்தான்குடியில் இதுவரை ஐந்து பேருக்கு கொரோனா  வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. 

இவர்களில் மூவர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .