Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Princiya Dixci / 2022 செப்டெம்பர் 06 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
திட்டமிட்ட நிலப்பறிப்புக்களால் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளமை பற்றியும் அவற்றை மீட்பதற்கான முன்னெடுப்புக்களில் கடந்து வந்த பாதை பற்றியும் ஆராயும் செயற்பாட்டாளர்களின் கற்றுக்கொண்ட பாடங்கள் எனும் மீளாய்வு, அக்கரைப்பற்றில் நேற்று (05) இடம்பெற்றது.
மனித எழுச்சி அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் காணி உரிமைகளுக்கான அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டச் செயலணியின் செயற்பாட்டாளர்களான துறைசார்ந்தோரும் புத்திஜீவிகளும் விவசாயிகளும் காணிகளைப் பறிகொடுத்தோரும் கலந்துகொண்டனர்.
மனித எழுச்சி அமைப்பின் பணிப்பாளர் கே. நிஹால் அஹமட் தலைமையில் இடம்பெற்ற இந்த மீளாய்வுக் கூட்டத்தில் கடந்த கால நடவடிக்கைகளின் முன்னேற்றமும் இடர்பாடுகளும் எதிர்கால திட்டமிடல் பற்றியும் ஆராயப்பட்டன.
நாடு தற்போது உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்ளும் வேளை அம்பாறை மாவட்டத்தில் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் பொன் விளையும் பூமி விவசாயம் செய்ய முடியாமல் தடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்தக் காணிகளை அரசு உடனடியாக உரியவர்களிடம் உணவு உற்பத்திக்காக கையளிக்க வேண்டும் என பாதிக்கப்பட்டோர் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந்த விடயத்தில் அதிகாரிகள் தம்மை கிட்டத்தட்ட ஒரு விரக்தி நிலைக்கு இட்டுச் சென்றிருப்பதாகவும் பாதிக்கப்பட்டோர் கருத்துத் தெரிவித்தனர்.
திட்டமிட்ட நிலப்பறிப்புக்களால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள 12 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 4,652 குடும்பங்களினது 14,127 ஏக்கர் பரப்பளவான காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதாக அங்கு தெரிவிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago