Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2022 டிசெம்பர் 09 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா. கிருஸ்ணா
வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் பகுதியில் நேற்று முன்தினம் (07) இரவு காட்டு யானை தாக்கி, 66 வயதுடைய கிருஸ்ணபிள்ளை நீலாம்பிக்கை என்னும் பெண் உயிரிழந்துள்ளார்.
புதன்கிழமை இரவு விவேகானந்தபுரத்துக்குள் புகுந்த காட்டு யானை, தனிமையில் உறங்கிக்கொண்டிருந்த பெண்ணைத் தாக்கி கொன்றுள்ளதுடன் பெணின் வீட்டையும் தோட்டங்களையும் சேதப்படுத்தியுள்ளன.
காலையில் பெண்ணின் வீட்டுக்கு சென்றவர்களே, யானை தாக்கி உயிரிழந்த நிலையில் பெண்ணின் சடலத்தைக் கண்ணுற்றதாக அயலவர்கள் தெரிவித்தனர். அண்மைக்காலமாக வெல்லாவெளி பிரதேசத்தில் காட்டு யானைகளின் தாக்குதல்கள் அதிகரித்துவரும் நிலைமையில், காட்டு யானைகளை கட்டுப்படுத்துமாறு பிரதேச மக்கள் தொடர்ச்சியான கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago