2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

கவனயீர்ப்பை கலைக்க முற்பட்ட பொலிஸாரால் பதற்றம்

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 10 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையத்தில் இன்று (10) காலை ஒன்றுகூடிய நிலையில், அவர்களை பொலிஸார் அங்கிருந்து கலைக்கமுற்பட்டபோது, பதற்ற நிலைமை ஏற்பட்டது.

சர்வதேச மனித உரிமைகள் நாள் என்ற காரணத்தால் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையத்தில் ஒன்றுகூடினர்.

இந்த நிலையில் அங்கு வந்த பொலிஸாரும் புலனாய்வுத் துறையினரும் அவர்களை அங்கிருந்துசெல்லுமாறு கோரியதற்கு  அங்கிருந்தவர்கள் தம்மால் செல்லமுடியாது என அவர்கள் மறுத்துள்ளனர். 

தற்போது கொரோனா தாக்கம் அதிகமாகவுள்ளதால் ஒன்றுகூடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரால் தொடர்ச்சியாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட போதிலும் அவர்கள் அதற்கு மறுப்புத் தெரிவித்தனர்.

இதன்போது அங்குவந்த மட்டக்களப்பு மாநகர சபை மேயர் சரவணபவன், மக்கள் தங்களது போராட்டத்தை முன்னெடுக்கமுடியும் எனவும் தந்தை செல்வா சிலையருகே போராட்டத்தை நடத்துமாறும் கூறிச்சென்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .