2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

கழுத்தில் கயிறு இறுகி சிறுவன் உயிரிழப்பு

Princiya Dixci   / 2022 ஜூலை 24 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிஜ வீதியை அண்டியுள்ள இடத்தில் வசித்த மதிவாணன் ஜதுசனன் என்ற 11 வயதுச் சிறுவன், நைலோன் கயிறு கழுத்தில் இறுகி உயிரிழந்த சம்பவம்,  வெள்ளிக்கிழமை (22) மாலை இடம்பெற்றுள்ளது.

வீட்டு விறாந்தையின் கூரையில் தராசில் பொருட்களை நிறுப்பதற்கான மைநலோன் கயிறு ஒன்று கட்டப்பட்டிருந்துள்ளது. அந்தக் கயிற்றில் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது தாய் வீட்டினுள் வேலை செய்து கொண்டிருந்துள்ளார். தனிமையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் நடமாட்டம் கேளாது போகவே தாய் வீட்டினுள் இருந்து வெளியே வந்து பார்க்கும்போது, சிறுவன் கழுத்து இறுகி உயிரிழந்திருந்தமை தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த சிறுவனின் சடலம், உடற் கூராய்வுப் பரிசோதனைக்காக மட்டக்கயப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஜதுசனன், மட்டக்களப்பு, தாண்டவெண்வெளி புனித ஜோசெப் வாஸ் வித்தியாலயத்தில் தரம் 5 இல் கல்வி பயின்ற மாணவன் ஆவார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .