2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை

கரும்பு காணியிலிருந்து சடலம் மீட்பு

Janu   / 2023 டிசெம்பர் 24 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாங்காமம் பகுதியில் காணி ஒன்றில் இருந்து  கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமொன்று சனிக்கிழமை (23)  மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய முஹம்மது சித்தீக் ஹாஜியார்  என்பவரே  இவ்வாறு வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் வேலை ஒன்றினை முடித்த பின்னர் அதற்கான  கூலி கொடுப்பதில் ஏற்பட்ட தகராறே இக்கொலைக்கு  காரணம் எனவும் இச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை காலை  இடம்பெற்றுள்ளதுடன் அருகில் இருந்த வீடு ஒன்றில் மறைத்து வைத்து  சனிக்கிழமை  அதிகாலை அருகிலுள்ள கரும்பு காணிக்குள் வீசப்பட்டுள்ளதாக விசாரணையில்  தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முனடனெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

பாறுக் ஷிஹான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X