Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2022 பெப்ரவரி 09 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாநகர சபையில் மாநகர சபையின் கட்டளை சட்டம் இலங்கை சோசலிஷ குடியரசின் சட்டம் மீறப்படுவது வெளிப்படையாகயிருந்தும் மாகாண சபை நிர்வாகம் இதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென மட்டக்களப்பு மாநகர சபையின் மேயர் தி.சரவணபவன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளின் அபிவிருத்திக்காக 2020ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி மூலமான வேலைத்திட்டங்கள் ஆரம்பித்துவைக்கப்பட்டு வருகின்றன.
இதன்கீழ், மட்டக்களப்பு விமான நிலைய பிரதான வீதியின் 01ஆம் மற்றும் 02ஆம் குறுக்கு வீதிகளின் புனரமைப்பு பணிகள், இன்று (09) காலை ஆரம்பித்துவைக்கப்பட்டன.
வட்டார உறுப்பினர் அ.கிருரஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மட்டக்களப்பு மாநகர சபையின் மேயர் கலந்துகொண்டு, வீதி அபிவிருத்தி பணியை ஆரம்பித்துவைத்தார்.
மாநகர சபையின் 20 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில், இந்த வீதிகள் புனரமைப்பு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது உரையாற்றிய மாநகர மேயர், “இந்த வேலைத்திட்டங்கள் 2020ஆம் ஆண்டு பாதீட்டில் ஒதுக்கீடுசெய்யப்பட்டிருந்தன. 2020ஆம் ஆண்டு மத்திய அரசு மற்றும் வேறு நிறுவனங்கள் ஊடாக வழங்கப்பட்ட பாரிய வேலைத்திட்டங்கள் இருந்த காரணத்தால் டிசெம்பர் மாதத்தில் செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
“இருந்தபோதிலும் 2020 டிசெம்பரில் நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இந்த வேலைகளை அமுல்படுத்துவதில் பாரிய தாமதங்கள் ஏற்பட்டன.
“இதேபோன்று 2021ஆம்ஆண்டு வேலைத்திட்டங்களும் தாமதப்படுத்தப்பட்டிருந்த காரணத்தால் மாற்று திட்டமாக மாநகர சபை நேரடியாக வேலைத்திட்டங்களை செய்யாது, வெளியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் இதனை வழங்கி பூர்த்திசெய்வது என்று மாநகர சபையின் தீர்மானத்தின் அடிப்படையில் வெளியாருக்கு வழங்கப்பட்டு, திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
“மாநகர சபையின் செயற்பாடுகளுக்கு தடையாகயிருக்கும் அதிகாரி மாற்றப்படும்பட்சத்தில், மாநகர சபை நேரடியாக களத்திலிறங்கி பொதுமக்களுக்கு அதியுட்ச நன்மைகளை வழங்ககூடிய வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
“வெளியாருக்கு ஒப்பந்தம் வழங்கும்போது, சுமார் 40 சதவீதமான வேலைகள் குறைவாக செய்யக்கூடிய நிர்ப்பந்தம் உள்ளது. மாநகர சபை வளங்களை பயன்படுத்தி நாங்கள் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும்போது, ஒதுக்கப்பட்ட நிதியானது பொருள்களை கொள்வனவு செய்வதற்கு மட்டும் பயன்படுத்தப்படுவதனால் மதிப்பீட்டுக்கு அதிகமான வேலைகளை செய்யகூடியதாகயிருந்தது.
“மட்டக்களப்பு மாநகர சபையில் மாநகரசபையின் கட்டளை சட்டம் இலங்கை சோசலிச குடியரசின் சட்டம் மீறப்படுவது வெளிப்படையாகயிருந்தும் மாகாண சபை நிர்வாகம் இதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக ஆணைக்குழுக்களை நிறுவியிருந்துடன், அதன் ஊடாக மாநகர சபையின் கட்டளை சட்டம் மீறப்பட்டுள்ளது தெளிவாகியிருந்தது.
“அதனை மீறிய அதிகாரிக்கு எதிராக எந்தவிதமான ஒழுக்காற்று நடவடிக்கைகளும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. அவ்வாறு ஓழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், மாநகர சபையின் செயற்பாடுகளில் எந்தவித தடங்கல்களும் ஏற்பட்டிருக்காது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago