2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

கடல் நீர் அருந்திய இளைஞன் ஆபத்தான நிலையில் மீட்பு

Freelancer   / 2024 ஜூன் 19 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

மட்டக்களப்பு - பாசிக்குடா கடலில் நீராடிய இளைஞன் ஒருவன் நீரில் மூழ்கிய நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் நேற்று (18) செவ்வாய்க் கிழமை பாசிக்குடா கடலில் நீராடிக் கொண்டிருந்த போது 21 வயதுடைய இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கியுள்ளார்.

நீரில் மூழ்கிய இளைஞனை பாசிக்குடா கடற்படையினர், பொலிஸார் ஆபத்தான நிலையில் மீட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

நீரில் மூழ்கிய இளைஞன் கூடுதலாக நீர் அருந்தியதில் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .