Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Princiya Dixci / 2022 செப்டெம்பர் 09 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு - வாகரை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வட்டுவான் ஆற்றில் கடந்த இரு நாட்களாக மீன்கள், இறால்கள், நண்டுகள் மற்றும் பாம்புகள் உப்பட பல கடல்வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன.
இறால் பண்ணையின் நச்சுத்தன்னைமை கொண்ட கழிவு நீர் இந்த ஆற்றில் கலந்ததால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு நீதி வேண்டுமெனவும் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் க.கருணேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த செவ்வாய்கிழமை (06) திகதி அதிகாலை தொடக்கமே இவ்வாறு கடல்வாழ் உயிரினங்கள் மர்மமான முறையில் திடீரென இறந்து கரையொதுங்கி வருகின்றன.
இது தொடர்பாக பிரதேச செயலகத்துக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, அந்த அதிகாரிகள் உயிரிழந்த மீன்களை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்த பிரதேச அதிகாரிகளின் பரிசோதனையில் எமக்கு நம்பிக்கையில்லை. இந்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளோம். இந்த ஆற்றில் இவ்வாறு ஒருபோதும் மீன்கள் இறந்து கரையொதுங்கியது அல்ல எனவும் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் தெரிவித்தார்.
இப்பிரதேசத்தில் சுமார் 320 குடும்பங்கள் வாழ்ந்து வருவதுடன், இவர்களில் 250 குடும்பங்கள் வாவாதார தொழிலான நன்னீர் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டுவருகின்ற நிலையில், இவ்வாறு மீன் இனங்கள் உயிரிழந்து கரையொதுங்கியதால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு நீதி வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
49 minute ago
54 minute ago
3 hours ago