2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கடலில் குளிக்கச்சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 12 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு – ஏறாவூர் புன்னக்குடா கடலில் குளிக்கச்சென்ற 15வயதான இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (11) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஏறாவூர் தைக்கா வீதியைச் சேர்ந்த – ரமீஸ் சஜாத் என்பவரே தனது ஐந்து நண்பர்களுடன் கடலில் குளித்த போது  இவ்வாறு  நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .